இஸ்லாத்தில் நண்பர்கள் (தினம்) Friendship day ஆகஸ்ட்

ஜும்ஆ பயான் : 101

07 : ஆகஸ்ட் : 2020

ஹிஜ்ரி வருடம் 1441

துல் ஹஜ் மாதம்

பிறை 16

பயான் தலைப்பு

இஸ்லாத்தில் நண்பர்கள் (தினம்) Friendship day

அன்னை, தந்தை, சகோதரர்கள் என நம் உறவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான தினங்களை கொண்டாடுவோம்.

அதே போன்று நண்பர்களுக்கென்று தனி தினத்தையும் சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம்.

உலகம் முழுவதும், ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 

வள்ளுவர் சொன்ன நட்பு

நட்பின் மகத்துவத்தை ஐந்து அதிகாரங்களாக திருவள்ளுவர் உருவாக்கினார்.

1) நட்புக்கு மட்டும்  நட்பு

2) நட்பாராய்தல்

3) பழைமை

4) தீ நட்பு

5) கூடா நட்பு

நட்பு வைப்பது என்பது

குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

மு.வரதராசனார் உரை:

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

عَنْ أَبِي ذَرٍّ قَالَ

قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحْقِرَنَّ مِنْ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4760)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: திர்மிதி (1867)

நட்பின் தோற்றம் துவக்கம்

ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம்.

இன்றைய உண்மையான நண்பர்கள் யார்

நண்பனின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு ,அவனுக்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருப்பவன் உண்மையான நண்பனா ?

அல்லது நண்பன் அழைக்கும்போதெல்லாம் , அவனைப் பின் தொடர்ந்து செல்லுவது ,ஊர் சுற்றுவது ,பிறந்தநாள் கொண்டாடுவது இதுபோன்று  செய்பவன் உண்மையான நண்பனா?

நண்பனுக்கு ஏதாவது ஒன்று என்றால் ,  வரிந்துக் கட்டிக் கொண்டு நண்பனுக்காக வக்காலத்து வாங்குபவன் உண்மையான நண்பனா?

காலையில் எழுந்தவுடன் நண்பனின் வீட்டு வாசலில் , மச்சி சீக்கிரம் வா ” நாம்ம இப்போ அங்கே போவோம் , இங்கே போவோம் என்று உயிரை எடுப்பவன் உண்மையான நண்பனா?

மதுவை அருந்திக் கொண்டு, புகைப் பிடித்துக் கொண்டு காலத்தையும் , நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையான நண்பர்களா?

நண்பர்கள் 3 வகைகள்

கஸ்ஸாலி (ரஹ்) என்ற மாமேதை நட்பினை மூன்று வகையாக பிரிக்கின்றார்கள்.

முதலாவது வகை நட்பு உணவை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவை.

இரண்டாவது வகை நட்பு மருந்தினை போன்றது. இந்த வகை நட்பு எப்போதாவது தேவை.

மூன்றாவது வகை நட்பு நோயை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவையில்லை என்பார்கள்.

நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல். அந்த பாடல் விளக்கம் இதுதான்:

ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று, வாழைமரம் போன்றவர்கள்.

பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.

தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது. அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன்.

அல்லாஹ்விற்க்காக நட்பின் அவசியம்

عَنْ اَبِيْ مُوْسَي ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَلْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ بَيْنَ اَصَابِعِهِ.
رواه البخاري، باب نصر المظلوم، رقم:٢٤٤٦

ஒரு முஸ்லிமுக்கு மற்ற முஸ்லிமுடன் இருக்கும் நட்பு ஒரு கட்டிடத்தைப் போன்றது, அதன் ஒரு பகுதி இன்னோரு பகுதியை பலப்படுத்துகிறது” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், தமது ஒரு கையின் விரல்களை மற்றோரு கை விரல்களோடு கோர்த்துக் காட்டினார்கள். முஸ்லிம்களும் இவ்வாறே ஒருவர் மற்றோருவருடன் இணைந்திருக்க வேண்டும், (மேலும், ஒருவர் மற்றவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதை விளக்கினார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَي: حُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَحَابِّيْنَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَنَاصِحِيْنَ فِيَّ،وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَزَاوِرِيْنَ فِيَّ، وَحُقَّتْ مَحَبَّتِيْ عَلَي الْمُتَبَاذِلِيْنَ فِيَّ، وَهُمْ عَلي مَنَابِرٍ مِّنْ نُوْرٍ يَغْبِطُهُمُ النَّبِيُّوْنَ وَالصِّدِّيْقُوْنَ بِمَكَانِهِمْ.

رواه ابن حبان (واسناده جيد): ٢ /٣٣٨، وعند احمد:٥ /٢٣٩, عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ 1: وَحُقَّتْ مَحَبَّتِيْ لِلْمُتَوَاصِلِيْنَ فِيَّ. وعند مالك ص:٧٢٣، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ: وَجَبَتْ مَحَبَّتِيْ لِلْمُتَجَالِسِيْنَ فِيَّ. وعند الطبراني في الثلاثة عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ 1: وَقَدْ حُقَّتْ مَحَبَّتِيْ لِلَّذِيْنَ يَتَصَادَقُوْنَ مِنْ اَجْلِيْ. مجمع الزوائد:١٠/٤٩٥
எனக்காக ஒருவருக்கொருவர் நேசம் கொள்வோர் மீது நான் நேசம் கொள்வது கடமையாகிவிட்டது, எனக்காக ஒருவர் பிறரின் நன்மையை நாடுபவர் மீது நான் நேசம் கொள்வது கடமையாகிவிட்டது. எனக்காக ஒருவர் பிறரை சந்திப்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது. எனக்காக ஒருவொருக்கொருவர் செலவு செய்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது. அவர்கள் ஒளியால் ஆன மேடைகள் மீது அமர்ந்திருப்பார்கள் அவர்களுக்கே சொந்தமான இந்தப் பதவியைப் பார்த்து நபிமார்கள், உண்மையாளர்கள் பொறாமைப்படுவார்கள்” என்று அல்லாஹுதஆலா கூறியதாக நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் உபாதத்திப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னு ஹிப்பான்)

எனக்காக ஒருவருக்கொருவருடன் தொடர்பு கொள்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது” என்று ஹஜ்ரத் உபாததுப்னு ஸாமித் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது

(முஸ்னத் அஹ்மத்)

எனக்காக ஒருவருக்கொருவராய் சேர்ந்து அமர்பவர்கள் மீது நான் நேசம் கொள்வது கடமையாகிவிட்டது” என்று ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில் வந்துள்ளது.

(முத்தா இமாம் மாலிக்)

எனக்காக ஒருவர் மற்றவருடன் நட்பு கொள்பவர்களை நான் நேசிப்பது என் மீது கடமையாகிவிட்டது” என்று ஹஜ்ரத் அம்ருப்னு அபஸா (ரலி) அவர்களின் வேறோரு அறிவிப்பில் வந்துள்ளது.

(தபரானி, மஜ்மஉஸ்ஸவாயித்)

அல்லாஹ்விற்காக நட்பு வைப்பதின் சிறப்பு

إِنَّ اللَّهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلاَلِى الْيَوْمَ أُظِلُّهُمْ فِى ظِلِّى يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلِّی

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4655)

அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்ஹத்தாப்(ரலி) நூல்: அபூதாவூத் (3060)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவுசெய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி) நூல்: அஹ்மத் (21114)

பழைமை வாய்ந்த நட்பு

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
திருக்குறள்: 801

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

மு.வரதராசனார் உரை:

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

٢٤٧- عَنْ عَائِشَةَ ؓ قَالَتْ: جَاءَتْ عَجُوْزٌ اِلَي النَّبِيِّ ﷺ وَهُوَ عِنْدِيْ، فَقَالَ لَهَا: مَنْ اَنْتِ؟ فَقَالَتْ: اَنَا جُثَامَةُ الْمَدَنِيَّةُ، قَالَ: كَيْفَ حَالُكُمْ؟ كَيْفَ اَنْتُمْ بَعْدَنَا؟ قَالَتْ: بِخَيْرٍ بِاَبِيْ اَنْتَ وَاُمِّيْ يَارَسُوْلَ اللهِﷺ فَلَمَّا خَرَجَتْ قُلْتُ: يَارَسُوْلَ اللهِ تُقْبِلُ عَلَي هذِهِ الْعَجُوْزِ هذَا اْلاِقْبَالَ، فَقَالَ: اِنَّهَا كَانَتْ تَاْتِيْنَا اَيَّامَ خَدِيْجَةَ ؓ ، وَاِنَّ حُسْنَ الْعَهْدِ مِنَ اْلاِيْمَانِ.

ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், என் வீட்டில் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் இருந்த சமயம் ஒரு மூதாட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் யாரென்று கேட்க, நான் தான் ஜுஸாமா மதனிய்யா” என்று கூறினாள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? எங்களுக்குப் பிறகு (நாங்கள் மதீனாவிற்கு வந்த பிறகு) உங்கள் நிலைமை எப்படி இருந்தது?” என நபி (ஸல்) அவர்கள் வினவ, யாரஸூலல்லாஹ், என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகுக! எல்லோரும் நலமாக உள்ளோம்” என்று கூறிவிட்டு அம்மூதாட்டி சென்றுவிட்டாள். யாரஸூலுல்லாஹி, அந்த மூதாட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவரின் பக்கம் இந்த அளவு கவனம் செலுத்தினீர்களே” என நான் (வியப்புடன்) கேட்டேன். இந்த மூதாட்டி கதீஜா (ரலி) அவர்களின் வாழ்நாட்களில் நம்மிடம் வரப்போக இருப்பார், பழைய நட்புகளைப் பேணுவது ஈமான் (உடைய அடையாளம்) ஆகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
திருக்குறள் : 802

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.

மு.வரதராசனார் உரை:

நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنّ اَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ اَهْلَ وُدِّ اَبِيْهِ.

رواه مسلم باب فضل صلة اصدقاء الاب …رقم: ٦٥١٣
நன்மைகளில் சிறந்த நன்மை, (தந்தையின் மரணத்துக்குப்பின்) தந்தையுடன் நட்பு கொண்டவர்களுடன் மகன் அழகிய முறையில் நடந்து கொள்வது” என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம்

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான்

‘நண்பர்களுக்காக எதையும் இழக்கலாம் எதற்காகவும் நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்’

-சதா பாரதி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். (அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

ஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).

மறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே! எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)

நண்பர்களை சந்தித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர், இல்லை. கண்ணியமானவனும் சங்கையான வனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (4656)

நண்பர்களுக்குள் உதவி செய்தல்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

பொருள்
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ

لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (13)

أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ ، وَلاَ يُسْلِمُهُ ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: புகாரி (2442)

(நட்பாராய்தல்) கெட்ட வழியை காட்டும் சதிகார நண்பர்கள்

குறள் 791:

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

மு. வரதராசன் உரை:
நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.

மு. கருணாநிதி உரை:
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.

Translation:
To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.

يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا‏
(அன்றி) “என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா?
(அல்குர்ஆன் : 25:28)

لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ‌  وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا‏
நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பி விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!” (என்றும் புலம்புவான்.)
(அல்குர்ஆன் : 25:29)

தீ நட்பு

குறள்:812

உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.

குறள் விளக்கம்:

தமக்குப் பயனுள்ள போது நட்புக் கொண்டு, பயனில்லாதபோது பிரிந்து செல்கின்றவரின் நட்பினைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?

عَنْ مُعَاذٍؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: يَكُوْنُ فِيْ آخِرِ الزَّمَانِ اَقْوَامٌ اِخْوَانُ الْعَلاَنِيَةِ اَعْدَاءُ السَّرِيْرَةِ، فَقِيْلَ: يَا رَسُوْلَ اللهِﷺ فَكَيْفَ يَكُوْنُ ذلِكَ؟ قَالَ: ذلِكَ بِرَغْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ وَرَهْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ.
رواه احمد:٥/٢٣٥

இறுதிக் காலத்தில் சிலர், வெளித்தோற்றத்தில் நண்பர்களாகவும், அந்தரங்கத்தில் விரோதிகளாகவும் இருப்பார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதற்கு, யாரஸூலல்லாஹ், இது எதன் காரணமாக ஏற்படும்?” எனக் கேட்கப்பட்டது.தன்னுடைய சுய நலத்துக்காக வெளிரங்கத்தில் ஒருவர் மற்றவருடன் நட்புக்கொள்வார். அந்தரங்க விரோதத்தினால் அவ்விருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து பயப்படுவார்” என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)

தெளிவுரை:- மக்களின் விரோதமும், நட்பும் தத்தமது உலக ஆதாயத்தின் அடிப்படையில் இருக்கும். அல்லாஹுதஆலாவின் பொருத்தத்தைப் பெறுவதற்காக இருக்காது என்பதாம்.

(கூடா நட்பு) தீமைக்கு துனை போகும் நட்பு

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.


(824)

விளக்கம்:

முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசின போதும் அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டுவிட வேண்டும்.

தன் நண்பர் தீய பழக்கங்கள் உடையவராக இருந்தால் , அதில் ஈடுபடக் கூடாது என அவரிடம் உரிமையோடு கூறுபவரே நல்ல நண்பர்; மாறாக, மது குடிக்க வற்புறுத்தும் நண்பராக இருந்தால், அது நட்பே கிடையாது; அதற்குப் பெயர் கூடா நட்பு. அப்படிப்பட்ட நட்பை துணிந்து துண்டிக்க வேண்டும். நண்பருக்காக ஒரு தடவை என்று பிறர் சொல்வதை ஒருவர் செய்வாரேயானால் அது கெடுதலாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் இருவர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் வணக்கத்தில் திளைத்தவராக இருந்தார். அந்த வணக்காசாலி தன் நண்பரை பாவம் செய்யக் காணும் போதெல்லாம் (இதை) செய்யாதே என்று கூறுவார். ஒரு நாள் ஒரு பாவம் செய்பவராக தன் நண்பரை அவர் கண்ட போது அவரிடத்தில் (இதை) செய்யாதே என்று கூறினார். அதற்கு அவர், “என்னை விட்டுவிடு. எனக்கும் என் இறைவனுக்கும் இடைப்பட்ட (விஷயம் இது) என்னை கவனிப்பவராக நீ அனுப்பப் பட்டுள்ளாயா?” என்று கேட்டார். அந்த வணக்கசாலி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான் அல்லது சொர்க்கத்தில் உன்னை கொண்டு செல்லவே மாட்டான்” என்று கூறினார். பின்பு இவ்விருவர்களின் உயிரையும் அல்லாஹ் கைப்பற்றினான். அவர்கள் இருவரும் அகிலத்தின் இறைவனிடம் ஒன்று சேர்ந்தார்கள். அப்போது அல்லாஹ் அந்த வணக்கசாலியைப் பார்த்து, “என்னைப் பற்றி நீ அறிந்தவனா? என் கைவசம் உள்ளதைச் செய்ய நீ சக்தி படைத்தவனா?” என்று கூறி விட்டு பாவம் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, “செல். என்னுடைய அருளாள் சொர்க்கத்தில் நுழைந்து கொள்” என்று கூறினான். மற்றவரைப் பார்த்து “இவரை நரகிற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவுத் (4255)

சிரித்து மகிழ நட்பு இல்லை

குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

மு.வரதராசனார் உரை:

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் நண்பர்கள் சபைகளில் அமராதீர்கள்!

சிரித்து மகிழ்ந்து, கேளிக்கைகளில் ஒரு குழு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. புறம், கோள், ‘கார்ட்’, சூதாட்ட விளையாட்டு போன்றவைகளே அவர்களின் சபைகளில் இடம்பெறுகின்றன! அவர்களுடன் உட்காருவதால் அநேகமானோருடன் சகோதரத்துவ ரீதியான, நட்பு ரீதியான தொடர்பை எனக்கு ஏற்படுத்தும் என்ற வகையில் அவர்களோடு  அமர்ந்திருப்பவர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌  اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌  وَاتَّقُوا اللّٰهَ‌  اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
(அல்குர்ஆன் : 49:12)

எனவே, புறம் பேசப்படும் இடத்தில் உட்கார்ந்திருப்பவன், பாவத்தில் புறம் பேசியவனைப் போன்றே இருக்கின்றான். ஆதலால், அவர்களின் சபைகளை விட்டும் பிரிந்திருப்பதும், அவர்களுடன் உட்காராமல் இருப்பதும் உனக்கு அவசியமாகும்.

அடுத்து, ‘அவர்களுடன் நீ உட்கார்ந்திருப்பது பலமான பிணைப்பை அவர்களுடன் உனக்கு ஏற்படுத்துகிறது!’ ௭ன்ற உனது இக்கருத்து மறுமை நாளில் உனக்குப் பயன் தராது மண்ணறையில் நீ தனித்திருக்கும் போதும் உனக்குப் பயன் தராது. எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், ஒன்றில் நீ அவர்களைப் பிரிந்து விடுவாய்; அல்லது அவர்கள் உன்னைப் பிரிந்து விடுவார்கள். பின்னர், உங்களில் ஒவ்வொருவரும் தாம் செய்த செயலைக் கொண்டு பிரிந்து விடுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
اَلْاَخِلَّاۤءُ يَوْمَٮِٕذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ  ‏
அந்த நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள்.
(அல்குர்ஆன் : 43:67)

நல்ல நட்பு நம்மை உயர்த்திவிடும்

(ورفعناه مكانا عليا) فقال كعب: أما إدريس فإن الله أوحى إليه اني أرفع لك كل يوم مثل جميع عمل بني آدم (لعله من أهل زمانه) فأحب أن يزداد عملا فأتاه خليل له من الملائكة فقال  له : ان الله أوحى إلي وكذا فكلم ملك الموت حتى أزداد عملا فحمله بين جناحيه ثم صعد به إلى السماء فلما كان في السماء

الرابعة تلقاه ملك الموت منحدرا فكلم ملك الموت في الذي كلمه فيه إدريس، فقال: وأين إدريس ؟ قال هو ذا على ظهري فقال ملك الموت فالعجب  بعثت وقيل لي اقبض روح إدريس في السماء الرابعة، فجعلت أقول: كيف أقبض روحه في السماء الرابعة وهو في الارض فقبض روحه هناك فذلك قول الله عزوجل (ورفعناه مكانا عليا).

ورواه ابن أبي حاتم عند تفسيرها * وعنده فقال لذلك الملك: سل لي ملك الموت كم بقي منعمري ؟ فسأله وهو معه كم بقي من عمره ؟ فقال: لا أدري حتى أنظر، فنظر فقال: إنك لتسألني عن رجل ما بقي من عمره إلا طرفة عين، فنظر الملك إلى تحت جناحه إلى إدريس فإذا هو قد قبض وهو لا يشعر

ஹிலால் பின் யசாப் (ரலி) கூறியுள்ளார்கள். நான் சபையில் இருந்தபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கஅப் (ரலி) அவர்களிடம் நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம் என்று அல்லாஹ் கூறியுள்ளதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இறைத்தூது அறிவித்தான். நிச்சயமாக நான் ஒவ்வொரு நாளும் ஆதமுடைய பிள்ளைகளின் அனைத்து நற்செயல்களைப்போல உமக்கு உயர்த்துவேன். (இது அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தவர்களின் நற்செயல்களாக இருக்கலாம்.) எனவே அவர் இன்னும் அதிகமாக நன்மைசெய்ய விரும்பினார்.

 வானவர்களிலிருந்து அவருக்குரிய ஒரு நண்பர் அவரிடம் வந்தார். நிச்சயமாக அல்லாஹ் எனக்கு இன்னின்ன இறைத்தூதை அறிவித்துள்ளான் என்று அவர் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் கூறினார். இத்ரீஸ் நபி அவர்கள் உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவரிடம் எனக்காக பேசுவீர். (அதாவது) நான் நற்செயல்களை அதிகப்படுத்துகின்ற வரை என்னுடைய உயிரைக் கைப்பற்றுவதை அவர் பிற்படுத்தட்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த வானவர்  இத்ரீஸ் நபி அவர்களை தம்முடைய இரண்டு இறக்கைகளுக்குள் வைத்துகொண்டு வானத்தை நோக்கி ஏறினார். நான்காவது வானத்தை அடைந்த போது திடீரென அவ்வானவரை உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் சந்தித்தார். இத்ரீஸ் (அலை) எதைப் பேசியிருந்தாரோ அதைப்பற்றி அவ்வானவர் உயிரைக்கைப்பற்றக்கூடிய வானவரிடம் பேசினார். இத்ரீஸ் எங்கே என்று அவர் வினவினார். இதோ அவர் என்னுடைய முதுகில் இருக்கிறார் என்று அவ்வானவர் பதிலளித்தார். அப்போது மலக்குல் மவ்த் என்ன ஆச்சரியம் நான்தான் (அவருடைய உயிரைக் கைப்பற்ற) அனுப்ப பட்டுள்ளேன். இத்ரீஸ் உடைய உயிரை நான்காவது வானத்தில் வைத்து கைப்பற்றுமாறு எனக்கு கூறப்பட்டுள்ளது.அவர் பூமியில் இருக்கின்ற நிலையில் நான் எவ்வாறு அவருடைய உயிரை நான்காவது வானத்தில் கைப்பற்ற முடியும்? என்று நான் என்னையே கேட்கலானேன் என்று கூறிவிட்டு அங்கேயே அவருடைய உயிரைக் கைப்பற்றிக்கொண்டார் இதுதான் அல்லாஹ் கூறுகின்ற நாம் அவரை ஓர் உயரிய இட்த்தில் உயர்த்தினோம் என்பதாகும் என கஅப் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல். தப்ஸீர் அத்தப்ரீ.

நல்ல காரியங்களை காது கொடுத்து கூட கேட்காத நண்பர்கள்

وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ‏
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக்கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாகச்) சாட்டிவிடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான்.
(அல்குர்ஆன் : 43:36)

وَاِنَّهُمْ لَيَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِيْلِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ‏
நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தாம்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 43:37)

حَتّٰٓى اِذَا جَآءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِىْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ‏
நம்மிடம் (வரும் வரையில்தான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) “எனக்கும் உமக்கு மிடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலைதூரமாக இருந்திருக்க வேண்டாமா?” என்றும், “(எங்களை வழிகெடுத்த எங்களுடைய) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்” என்றும் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 43:38)

وَلَنْ يَّنْفَعَكُمُ الْيَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ‏
(அதற்கு அவர்களை நோக்கி) “நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தாம்” (என்றும் கூறப்படும்).
(அல்குர்ஆன் : 43:39)

பயனளிக்காத நண்பர்கள்

يَوْمَ لَا يُغْنِىْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْــٴًــا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏
அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.
(அல்குர்ஆன் : 44:41)

اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ‌ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்.) நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 44:42)

உயிர் கொடுக்கும் தோழர்கள்

உலகில் உள்ள எவருக்கும் அமையாத நட்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே அமைந்துள்ளது

ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு ஹூதைபிய்யா என்னும் இடத்தில் நடந்த உடன்படிக்கையில் கலந்துகொண்டு நபியின் கரங்களில் உயிர் உள்ளவரை போராடுவது என்று செய்து கொண்ட உடன்படிக்கையின் போது பின்வரும் வசனத்தை இறைவன் இறக்கிவைத்தான்.

لَـقَدْ رَضِىَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًا ۙ‏
அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 48:18)

அபூபக்கர் (ரலி) அவர்களின் நட்பு

அபூபக்ருடைய வாசலைத் தவிர (மஸ்ஜிதுந் நபவிக்கு வரும்) அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 3678, பைஹகி 4496)

இறைத்தூதர். அவர்கள் கூறினார்கள் தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் (ரழி) அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் அபூபக்ரின் வாசலைத் தவிர வேறு எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ, புகாரி 3654

நட்பை முறிப்பதும் பாவம்

عَنْ عَائِشَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يَكُوْنُ لِمُسْلِمٍ اَنْ يَهْجُرَ مُسْلِمًا فَوْقَ ثَلاَثَةٍ، فَاِذَا لَقِيَهُ سَلَّمَ عَلَيْهِ ثَلاَثَ مِرَارٍ كُلُّ ذلِكَ لاَ يَرُدُّ عَلَيْهِ، فَقَدْ بَاءَ بِاِثْمِهِ.

رواه ابو داؤد، باب في هجرة الرجل اخاه، رقم: ٤٩١٣

தன் முஸ்லிம் சகோதரருடன் (நட்பை முறித்து) அவரை மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் நட்பு கொள்ளாமல் விட்டுவைப்பது ஒரு முஸ்லிமுக்கு முறையல்ல. எனவே, அவரைச் சந்தித்தால் மூன்று முறை அவருக்கு ஸலாம் கூறவும், அவர் ஒரு தடவை கூட ஸலாமுக்குப் பதில் சொல்லவில்லையென்றால், ஸலாம் சொன்னவரின் (மூன்று நாள் நட்பை முறித்ததின்) பாவமும் ஸலாமுக்கு பதில் கூறாதவரின் மீது வந்து விடும்” என நபி (ஸல்) கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: لاَ يَحِلُّ لِمُسْلِمٍ اَنْ يُصَارِمَ مُسْلِمًا فَوْقَ ثَلاَثٍ، وَاِنَّهُمَا نَاكِبَانِ عَنِ الْحَقِّ مَا كَانَ عَلَي صِرَامِهِمَا، وَاِنَّ اَوَّلَهُمَا فَيْئًا يَكُوْنُ سَبْقُهُ بِالْفَيْءِ كَفَّارَةً لَهُ، وَاِنْ سَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَقْبَلْ سَلاَمَهُ، رَدَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ، وَرَدَّ عَلَي اْلآخَرِ الشَّيْطَانُ، وَاِنْ مَاتَ عَلَي صِرَامِهِمَا لَمْ يَدْخُلاَ الْجَنَّةَ وَلَمْ يَجْتَمِعَا فِي الْجَنَّةِ.

رواه ابن حبان (واسناده صحيح علي شرط الصحيحين):١٢/٤٨٠

தன் முஸ்லிம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து வாழ்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல, எதுவரை அவ்விருவரும் நட்பை முறித்து இருப்பார்களோ அதுவரை சத்தியத்தைவிட்டும் விலகி இருப்பர். அவ்விருவரில் யார் (நட்புக் கொள்ள) முன் வருவாரோ அவருடைய இச்செயல் நட்பை முறித்த அவருடைய பாவத்திற்குப் பரிகாரமாகிவிடும், நட்புக் கொள்ள முன்வந்தவர் ஸலாம் சொன்னால், மற்றவர் அவரது ஸலாமை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், (பதில் சொல்லவில்லையென்றால்), ஸலாம் சொன்னவருக்கு மலக்குகள் பதில் சொல்வார்கள், மற்றவருக்கு ஷைத்தான் பதில் சொல்வான். நட்பைத் முறித்த நிலையிலேயே இருவரும் மரணித்துவிட்டால் சுவர்க்கமும் செல்லமாட்டார்கள், சொர்க்கத்தில் ஒன்று சேரவும்மாட்டார்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூற கேட்டதாக ஹஜ்ரத் ஹிஷாமிப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)

ஒரு வருடம் வரை நட்பை முறித்தவர்கள்

عَنْ اَبِيْ خِرَاشِ نِ السُّلَمِيِّ ؓ اَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ هَجَرَ اَخَاهُ سَنَةً، فَهُوَ كَسَفْكِ دَمِهِ.

رواه ابو داؤد، باب في هجرة الرجل اخاه، رقم:٤٩١٥

எவர் தன் முஸ்லிம் சகோதரருடன் (கோபம் கொண்டு) ஓர் ஆண்டு காலம் வரை நட்புகொள்ளாமல் இருப்பது அவரது இரத்தத்தை ஒட்டியதைப் போன்று!” (வருடம் முழுவதும் நட்பை முறித்த பாவமும், அநியாயமாகக் கொலை செய்த பாவமும் ஒன்றுக்கொன்று சமமானது)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூகிராஷ் ஸுலமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத்)

வஸ்ஸலாம்

தொகுப்பு :

மௌலவி அல்ஹாஃபிழ் A.முஹம்மது வலியுல்லாஹ் அல்தாஃபி B.Com., MBA.

தலைமை இமாம் : மஸ்ஜிதே ஃபலாஹ் (பெரிய பள்ளிவாசல்), பெரியபட்டிணம், இராமநாதபுரம் மாவட்டம். 9600908288

மௌலவி அல்ஹாஜ் M.அப்துல் மாலிக் ரஷாதி
பேராசிரியர் : நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி சேலம்

பின்னூட்டமொன்றை இடுக